Friday, January 8, 2010

படித்ததில் பிடித்தது - கலாம் காலங்கள் - PM நாயர்







நூலாசிரியர் PM நாயர் 2002 லிருந்து 2007 வரை ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் செயலாளராக பணியாற்றியவர். பாண்டிசேரியின் தலைமைச செயலாளர் ஆகவும் இருந்தவர்.

எந்த ஒரு பெரிய மனிதரும் தன்னுடைய செயலாளருக்கு நாயகனாக இருக்க முடியாது என்பதை தகர்த்து அவரைப் புகழுந்து "கலாம் காலங்கள்"எழுதியுள்ளார் நாயர்.

இனி கலாம் அவர்களின் சாதனைக் காலம். நாயர் வார்த்தைகளில் ....

1 "மிஸ்டர் நாயர்" என்று செயலாளரை அழைப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

2 ஒரு நாளைக்கு 70 முதல் 100 வரை கடிதங்களை விவாதிப்பதற்காக குறிக்கப்பட்டு இருக்கும்.
3 புத்தக விமர்சனங்கள் பக்க வாரியாக கூறக்கூடியவர்.

4 லட்சத் தீவுகளைத் தவிர இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் , கிராமத்திற்கும் தனது பதவிக் காலத்தில் பயணம் செய்தவர்.

5 உலகின் உயரமானப் போர்ப் பகுதியான சீயாசின் சென்றது, விசாகப்பட்டனத்தில் நீர்மூழ்கிக் கப்பலில் சாகசம் , சூப்பர்சொனிக் SQ30
போர் விமானம் 15 நிமிடங்கள் ஒட்டிய முதல் ஜனாதிபதி என்றப் பெருமைகளைப் பெற்ற ஒரே ஜனாதிபதியாக திகழ்கிறார் .

6 மே 2006 இல் தனது அண்ணன், கொள்ளுப் பேரன் மற்றும் 52 உறவினர்கள்
டெல்லி சுற்றுலா மற்றும் அஜ்மெர் ஷெரிப் சென்று வர அலுவலகத்திற்கான வாகனங்கள் ஒரு முறைக் கூடப் பயன்படுத்தப் படவில்லை, அறை ,தேனீர் பயன்பாடு செலவுகளை தனது சொந்தப் பணத்தில் செலுத்தினர். 3.52 லட்சம் செலுத்தியதை விளம்பரப் படுத்தக் கூட இல்லை.

7 இப்தார் விருந்து ஜனாதிபதி மாளிகையில் நடத்த ஆக்கும் செலவு 2.5 லட்சங்களை ஏழை மக்களுக்கு அரிசி, பருப்பு, போர்வை, குளிர்கால உடைகள் எனக் கொடுத்ததோடு தன பங்காக 1 லட்சத்தையும் கொடுத்தார்
குடியரசுத் தலைவரின் மாளிகை பரந்து விரிந்தது (329 ஏக்கர் ) என்பது அனைவரும் அறிந்ததே

அது

குடியரசுத் தலைவரின் மனது போல்

என்பதை PM நாயர் கலாம் காலங்களில் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.












Monday, January 4, 2010

ஹைகூ கவிதைகள் -தஞ்சை பத்மநாபன்




தாஜ் மகால்




சமாதியில்


விதைக்கப்பட்ட


காதல் விருட்சம்


ஹைகூ கவிதைகள் -தஞ்சை பத்மநாபன்


பரு

பதின்ம வயதினர்
தொலைத்த
பாதித் தூக்கம்

ஹைகூ கவிதைகள் - தஞ்சை பத்மநாபன்


நடை பாதை


நாலும்

நடக்குமிடம்

நடப்பதை மறித்து

ஹைகூ கவிதைகள் - தஞ்சை பத்மநாபன்


தேர்தல் மை

முகத்தில் கரி
பூசிக் கொள்ள
முன்னோட்டம்

Saturday, January 2, 2010

படித்ததில் பிடித்தது




" ஒரு நல்லப் புத்தகமும் சில கோப்பை காப்பியும் ஒரு விடுமுறை நாளை சிறப்பாகக் கழிக்க போதுமானது" என்றார் தஞ்சை பிரகாஷ். அப்படி ஒரு விடுமுறை நாளில் படித்த புத்தகங்களில் பிடித்த வரிகள்

துறவி நண்டு - எஸ். தேன்மொழி


கவிதைத் தொகுப்பு. காலச்சுவடு வெளியீடு.


"ஒருமை " தலைப்பில் ஒரு கவிதை


தீண்டத்தகாதவள் என்று
தெரியவரும்போது நீ
தீட்டுப் படவில்லை என்பதை
தெருவிப்பதற்காக அனுமதிக்கிறேன்
உன் ஆபாசத் தீண்டலை







தூரிகை ..... துப்பாக்கியாகிறது.........



கவிதை தொகுப்பு - பா. விஜய்



சுப-வீரபாண்டியன் அவர்களின் அணிந்துரையோடுத் தொடங்குகிறது.

நெடுங்கவிதை, ஹைகூ( மின்னல் என்று தலைப்புடன்), ஒரே மூச்சில் வாசிக்க சரளமாகவும், சாமானியனும் புரிந்துக் கொள்ளக் கூடிய நடையில் அமைந்துள்ளது. எ.கா
சமதர்மம்
நாங்கள் அவர்களை
தொட்டால் அது
அபசாரம்
அவர்கள்
எங்களைத் தொட்டால்
அது ஆசிர்வாதமாம்

சிகரட்

உன் மரணத்தை

எழுதும்

பல்பக் குச்சி

அனா ஆவன்னா - நா. முத்துக்குமார்

பல வெகுஜனப் பத்திரிகைகளில் வெளிவந்த கவிதைகளின் தொகுப்பு.

ஒவ்வொருக் கவிதையும் ஒரு காட்சியை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

கவிதைகளை படிக்கும்போதே காட்சிகள் மனதில் விரிகிறது. நல்லப் படைப்பு.

நட்பு காலம் - அறிவுமதி

நட்பை புத்தகம் முழுவதும் விவரிக்கிறது.

பரிசளிக்க ஏற்றப் புத்தகம் . அழகான ஓவியங்கள் புத்தகங்கள் முழுவதும்

பூத்துக் கிடக் கின்றது

மற்றும்
மழைப் பெண் - பழனி பாரதி
என் படுக்கையறையில் யாரோ ஒளிந்து இருக்கிறார்கள் - மனுஷ்யப் புத்திரன்
தொகுப்புகளும் என் விடுமுறையை நிறைத்தன.

தஞ்சை பிரகாஷின் வார்த்தைகள் உண்மைதான் என்பதை விடுமுறையும் படித்த புத்தகங்களும் சில கோப்பை தேனீர் களும் புரியவைத்தன.