Monday, January 4, 2010

ஹைகூ கவிதைகள் -தஞ்சை பத்மநாபன்




தாஜ் மகால்




சமாதியில்


விதைக்கப்பட்ட


காதல் விருட்சம்


ஹைகூ கவிதைகள் -தஞ்சை பத்மநாபன்


பரு

பதின்ம வயதினர்
தொலைத்த
பாதித் தூக்கம்

ஹைகூ கவிதைகள் - தஞ்சை பத்மநாபன்


நடை பாதை


நாலும்

நடக்குமிடம்

நடப்பதை மறித்து

ஹைகூ கவிதைகள் - தஞ்சை பத்மநாபன்


தேர்தல் மை

முகத்தில் கரி
பூசிக் கொள்ள
முன்னோட்டம்

Saturday, January 2, 2010

படித்ததில் பிடித்தது




" ஒரு நல்லப் புத்தகமும் சில கோப்பை காப்பியும் ஒரு விடுமுறை நாளை சிறப்பாகக் கழிக்க போதுமானது" என்றார் தஞ்சை பிரகாஷ். அப்படி ஒரு விடுமுறை நாளில் படித்த புத்தகங்களில் பிடித்த வரிகள்

துறவி நண்டு - எஸ். தேன்மொழி


கவிதைத் தொகுப்பு. காலச்சுவடு வெளியீடு.


"ஒருமை " தலைப்பில் ஒரு கவிதை


தீண்டத்தகாதவள் என்று
தெரியவரும்போது நீ
தீட்டுப் படவில்லை என்பதை
தெருவிப்பதற்காக அனுமதிக்கிறேன்
உன் ஆபாசத் தீண்டலை







தூரிகை ..... துப்பாக்கியாகிறது.........



கவிதை தொகுப்பு - பா. விஜய்



சுப-வீரபாண்டியன் அவர்களின் அணிந்துரையோடுத் தொடங்குகிறது.

நெடுங்கவிதை, ஹைகூ( மின்னல் என்று தலைப்புடன்), ஒரே மூச்சில் வாசிக்க சரளமாகவும், சாமானியனும் புரிந்துக் கொள்ளக் கூடிய நடையில் அமைந்துள்ளது. எ.கா
சமதர்மம்
நாங்கள் அவர்களை
தொட்டால் அது
அபசாரம்
அவர்கள்
எங்களைத் தொட்டால்
அது ஆசிர்வாதமாம்

சிகரட்

உன் மரணத்தை

எழுதும்

பல்பக் குச்சி

அனா ஆவன்னா - நா. முத்துக்குமார்

பல வெகுஜனப் பத்திரிகைகளில் வெளிவந்த கவிதைகளின் தொகுப்பு.

ஒவ்வொருக் கவிதையும் ஒரு காட்சியை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

கவிதைகளை படிக்கும்போதே காட்சிகள் மனதில் விரிகிறது. நல்லப் படைப்பு.

நட்பு காலம் - அறிவுமதி

நட்பை புத்தகம் முழுவதும் விவரிக்கிறது.

பரிசளிக்க ஏற்றப் புத்தகம் . அழகான ஓவியங்கள் புத்தகங்கள் முழுவதும்

பூத்துக் கிடக் கின்றது

மற்றும்
மழைப் பெண் - பழனி பாரதி
என் படுக்கையறையில் யாரோ ஒளிந்து இருக்கிறார்கள் - மனுஷ்யப் புத்திரன்
தொகுப்புகளும் என் விடுமுறையை நிறைத்தன.

தஞ்சை பிரகாஷின் வார்த்தைகள் உண்மைதான் என்பதை விடுமுறையும் படித்த புத்தகங்களும் சில கோப்பை தேனீர் களும் புரியவைத்தன.











Monday, July 20, 2009

ஜாலியன் வாலா பாக்



டாக்டர் சத்யபால், டாக்டர் சைபுதீன் கிச்லூ இருவரும் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள். இவர்களை மாவட்ட நீதிபதி அழைத்ததாகச் சொல்லப் பட்டது. பிறகு இருவரும் காணாமல் போயினர். தலைவர்களைத தேடி அலுத்தத் தொண்டர்கள் மாவட்ட நீதிபதியைப் பார்க்க நேரில் ஊர்வலமாகச் சென்றனர். அவர்களை இராணுவம் வழி மறித்து, கட்டுகடங்காமல் போனதால் துப்பாக்கிச் சூடு நடத்தியது. ஆத்திரமடைந்த் கூட்டத்தினர் கடைகள், அமிர்தசரஸ் நேஷனல் பேங்க், போஸ்ட் ஆபீஸ் அனைத்தையும் தீயிற்கு இரையாக்கினர்.
லாகோருக்கும் கிளர்ச்சிப் பரவியது.
இந்த அடக்குமுறையைக் கண்டிக்க அமிர்தசரசில் உள்ள ஜாலியன் வாலா பாக் எனும் இடத்தில் கூட்டம் ஏற்ப்பாடு ஆனது.
இதில் ஜெனரல் டயர் தலைமையிலான ஆங்கிலேயப் படை கண்மூடித்தனமாக சுட்டதில் நானூறுக்கும் மேற்ப்பட்ட இந்தியர்கள் இறந்தனர். இரண்டாயிரம் பேர் படு காயம் அடைந்தனர். அங்குள்ள பெரும் கிணற்றில் விழுந்து இறந்தவர்களே நூற்றுக்கணக்கானவர்கள்.
தண்ணீர் விட்டா வளர்த்தோம் இப்பயிரை
கண்ணீரால் காத்தோம்
என இன்றும் சுதந்திர வேள்வியின் அனுபவத்தைச் சுமந்துக் கொண்டே நினைவாய் நிற்கிறது ஜாலியன் வாலா பாக்.

Wednesday, July 15, 2009

பதேபூர் சிக்ரி ( வெற்றித் தலை நகரம்)

பதேபூர் சிக்ரி அக்பர் ராஜபுத் அரசன் ரானா சங்காவைத் வீழ்த்தியதன் அடையாளமாககட்டப்பட்டது . அக்பரின் தலைநகரமாக பதினாறு ஆண்டுகள் இருந்தது. அவருடைய மகன் ஜகாங்கீர் இங்குதான் பிறந்தார். திவானி ஆம் என்ற பொது மக்களை சந்திந்கும் இடமும், திவானி காஸ் என்ற ஆலோசனை கூடமும், புகழ்மிக்க பீர்பால் கதைகளில் வரும் அக்பரின் தலைமை அமைச்சர் மற்றும் நவ ரத்தினங்களில் ஒருவரான பீர்பால் அரண்மனை இங்கு உள்ளது. இந்தியாவிலேயே மிகப் பெரிய மற்றும் மிக உயரமான என்ற பெயரைக்கொண்ட புலண்டர்வாசா (பெரிய வாசல் ) பதேபூர் சிக்ரிஇல் அமைந்து உள்ளது. மகான் சலீம் சிஷ்டி (அக்பரின் ஞான குரு) இருக்கும் வரை சிக்ரியிலேயே இருந்த அக்பர் , அவரது மறைவுக்குப பின்னர் தலை நகரை ஆக்ராவிற்கு மாற்றினார். இன்றும் சிக்ரி கிராமம் அக்பரின் வெற்றியைத் தாங்கிக் கொண்டு பதேபூர் சிக்ரி என்ற வெற்றித் தலை நகராக விளங்கி வருகிறது.