Friday, May 15, 2009

புதியதோர் உலகம் செய்வோம் - கவியரங்க கவிதை

புதியதோர் உலகம் செய்வோம

வாடகைத் தாய்
வானொலியில் தாலாட்டு
வாழவிரும்பும்வரை
வாழ்க்கை


ஆறு நொடிகளுக்குள்
அனைத்துத தகவல்கள்
அகராதியில் மட்டும
அன்பு




தொப்புள் கொடியாய்
தொடரும் வியாதிகள்
தொலைந்தே போயின
கருப்பிரதியாலே * *Embryo clone-

உயிர்ப்பிரதி*
காத்திருக்கும் *Transcenic clone
உதிரிப்பாகங்களாக
தோள் கொடுக்கும்
தோல் கொடுக்கும
உயிரும் கொடுக்கும்
நிஜ உயிர்த் தோழன்


மனித வாழ்நாள்
கற்காலத்தில்
பதினெட்டு
ஆண்டுகள்
சோழர் காலத்தில்
முப்பத்துமூன்று ஆண்டுகள்
தற்காலத்தில்
எழுபத்தொன்பது ஆண்டுகள்

நேனோ நுட்பம் மூலம்
சிரன்ஜீவிதனம்
சீகீரமே சாத்தியம்

கடல் தூர்த்து நிலம்
காகிதமிலா அலுவலகம்
பேசும் புத்தகம்
புத்தகமிலா நூலகம்
கணிப்பொறியில்
கடிதப்போக்குவரத்து
கைபேசி கட்டை விரல் அசைவில்
உலகம்
கணினியைப் பழுதுபார்க்க
கணினி
கவிதைஎழுத
மென்பொருள்

இவையனைத்தும்
இந்த நூற்றாண்டின்
இணையற்ற
இயற்பலன்கள்

இவை போதுமா
புதியதோர் உலகம் செய்ய ?

இன்றையத் தேவைகள்தான்
என்ன

இன்றையத்தேவைகளெல்லாம்

தாஜ்மகால்கள் அல்ல

அனபு மட்டுமே


இன்றையத்தேவைகளெல்லாம்

கோவில்கள் அல்ல

நன்னெறி மட்டுமே
இன்றையத்தேவைகளெல்லாம்
பொழுதுபோக்குப் பூங்காக்கள் அல்ல
பொழுதாககப் பயிற்சி களங்கள் மட்டுமே

உரிமைகளை விட
கடமைகள் பெரிது

கண்ணீரை விட
வியர்வை மேல்

கற்பனை நிழலின் சுகத்தை விட
உண்மை வெயிலின் சூடு சுகம்

சாவையே தீர்மானிக்கும்
சக்தி வந்துவிட்டது உனக்கு

வாழ்க்கையை தீர்மானிக்க
வாய்ப்புகளா இல்லை?

காத்திருக்காமல்
களத்திலிறங்குவோம்

புதியதோர் உலகு செய்வோம்

கல்வி
கழிவறை
கட்டாயம்
ஆக்குவோம்

நகர வசதிகளை
கிராமதிற்கும்
நகர்த்துவோம்

மரங்கள் வளர்ப்போம்
பசுமை காப்போம்


வருடதிற்கிருமுறை
ரத்த தானம் செய்வோம்
வாழ்நாளுக்குப் பிறகு
கண்தானம் செய்வோம்

யோகம் கற்போம்
நிஜ யோகம் பெறுவோம்
நதிகளை இணைப்போம்
வெள்ளப்பெருக்கைத்தடுப்போம்

நகரங்களை மெட்ரோரயில்களால்
நகர்த்துவோம்
(* டில்லியில் 38000 வாகனங்களுக்கு பதிலாக ஒரே ரயில் தேவையை பூர்த்தி செய்கிறது )

அறிவியல் வளர்ச்சியை
அறிமுகப் படுத்துவோம் கூடவே
அன்பின் ஆழம்
அதிகப்படுத்துவோம்
மானுட வாழ்வின்
மகத்துவம் அறிய
மனிதம் காப்போம்
மனிதம் மறவோம்
புதியதோர் உலகம் செய்வோம்

No comments:

Post a Comment