Saturday, April 24, 2010

நியூட்டனின் மூன்றாம் விதி நா.முத்துக்குமார்


நியூட்டனின் மூன்றாம் விதி கவிஞர் நா.முத்துக்குமாரின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு. எழுத்தாளர் கந்தர்வனின் முன்னுரையுடன் ஆரம்பமாகிறது.
அவரின் கூற்றுப்படியே புன்னகைக்கவும்,துயரப்படவும்,ஆழ்ந்து போகவும்,ஏராளமுள்ளன இந்த்த் தொகுப்பில்.
புன்னகைக்க

நியூட்டனின் மூன்றாம் விதி

ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்பது நியூட்டனின் மூன்றாம் விதி. அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் வீட்டில் வசிக்கும் கவிஞர், மேல் வீட்டுக்காரரின் அன்றாட நிகழ்வுகளி்ன் உடன் விழைவான சப்தங்கள் கீ்ழுள்ளவர்களுக்கு எவ்வளவு இடைஞ்சல் என்று உணராமல் பாக்கு இடிக்கும் பாட்டி,குழவி நகர்த்தும் அம்மா,பாட்டுக்கு எம்பிக்குதிக்கும் குழந்தைகள் போன்ற அனைத்துக்கும் எதிர்வினையாக அவர் வீட்டு மின்விசிறியின் சப்தம் தலையணையும் தாண்டி உன் காதுகளில் சுழன்று கொண்டிருக்கும் என்று கூறும் கவிதை புன்னகைக்க வைக்கிறது.

உன் உறவுகள் கூட
உன்னைப் போலவே.
உன்னைப் பழிவாங்கும் விதமாக
என்னால் முடிந்தது ஒன்றுதான்.
எனதருமை மேல்தளத்து நண்பா..
தலையணையையும் மீறி
உன் காதுகளில்
சுழன்று கொண்டிருக்கும்
என் மின்விசிறி

அனுமதி இலவசம் என்ற கவிதையில்

கிராமத்திற்கும் பரவிவிட்ட விஞ்ஞான முன்னேற்றத்தையும் அதற்கு வெள்ளந்தியாக கிராம மக்களின் எதிர் வினைகளையும் படம் பிடிக்கிறது இக்கவிதை.

தாத்தாவின் மரணத்தை
வெளிநாட்டில் பார்ப்பதற்காய்
வீடியோ எடுத்தார்கள்.

கொடுத்து வைக்காத பாட்டி
விஞ்ஞானத்திற்கு அடங்காமல்
முன்னமே இறந்துவிட்டாள்.

மாரடித்து அழும் பெண்கள்
முந்தானையை திருத்திக் கொண்டதும்
வயலக்காவூர் பெரியம்மா
அழுவதை நிறுத்தி
கேமராவைப் பார்த்து புன்னகைத்ததும்
தாத்தா வளர்த்த நாய்
கால்களை நக்கிக் கொண்டிருந்ததும்
நிகழ்வின்
மூன்று உறுத்தல்கள்

என்றும்

அண்ணனின் திருமண கேசட்,கடைக்குட்டி கலாராணி நடனமாடிய பள்ளி ஆண்டு விழா கேசட்டும் தாத்தாவின் சிவலோக பதவியடைந்த புத்தம் புது கேசட்டும் உறவினர்கள் ஒன்று கூடும் வேளையில் போட்டுப் பார்கக உத்தேசித்துள்ளோம், நீங்களும் வரலாம், அனுமதி இலவசம் என்கிறார் கவிஞர்.

இன்று செய்த சமூக சேவைகள் என்ற கவிதையில்

கடற்கரையில் காணாமல் போன குழந்தையை உரியவரிடம் சேர்த்தது,பாட்டிக்கு தையல் ஊசிக்கு நூல் கோர்த்துக் கொடுத்தது,எலக்ரிசியனுக்கு அவன் மனைவியின் கடிதத்தை சங்கடத்துடன் படித்துக் காட்டியது போன்றவற்றைப் பட்டியலிடும் கவிஞர் கடைசியாக
இப்படி முடிக்கிறார்

....
சூரியனும் தீக்குச்சியும்
என்று தலைப்பிட்ட
என் புதிய கவிதையை
எழுதாமல் விட்டு விட்டேன்

தலைப்பை திரும்பப் படித்தால் அவரின் குறும்பு புரியும்.

காதல் 2000 கவிதையில்

பழங்காலத்துக் காவியங்களில் கூறப்படும் நூலிடையாள்,இடை மெலிந்தாள் போன்றே இந்நாட்களின் கவிதையாக்கியிருக்கிறார்.

என் கைக்கடிகாரத்தின்
தோளினால் செய்த பட்டை
ஐந்தாம் துளையிலிருந்து
மூன்றாம் துளைக்கு
முன்னேறியும்
அடிக்கடி வாட்ச் கழல்வதை
அவனிடம் யார் சொல்வது?

மொத்தத்தில் நியூட்டனின் மூன்றாம் விதி கவிதைத் தொகுப்பு எதார்த்தங்களின் எதிர்வினைகளாக உள்ளது.

நியூட்டனின் மூன்றாம் விதி • நா.முத்துக்குமார்
(கவிதைத் தொகுப்பு)

ஐந்தாம் பதி்ப்பு
பட்டாம்பூச்சி பதிப்பகம்
சென்னை வெளியீடு

Sunday, February 14, 2010

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் முன் மொழிந்த புத்தகப் பட்டியல் (அனைவரும் படிக்க)


எழுத்துச் சித்தர் பாலகுமாரன் முன் மொழிந்த புத்தகப் பட்டியல்
1. கமலாம்பாள் சரித்திரம் - ராஜம் ஐயர்
2. மங்கையர்க்கரசியின் காதல் - வ.வே. சு. ஐயர்
3. புதுமைப்பித்தன் சிறுகதைகள் - புதுமைப்பித்தன்
4. சிறுது வெளிச்சம் - கு.ப.ரா.
5. பொன்னியின் செல்வன் - கல்கி
6. வேள்வித்தீ - எம்.வி. வெங்கட்ராம்
7. தெய்வம் பிறந்தது - கு. அழகிரிசாமி
8. மோகமுள், செம்பருத்தி - தி. ஜானகிராமன்
9. பசித்த மானுடம் - கரிச்சான் குஞ்சு
10. எங்கே போகிறோம் - அகிலன்
11. ஜே.ஜே. சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி
12. ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் - ஜெயகாந்தன்
13. 18 வது அட்சக் கோடு, கரைந்த நிழல்கள்- அசோகமித்திரன்
14. அலைவாய்க் கரையில் - ராஜம் கிருஷ்ணன்
15. சாயாவனம் - சா. கந்தசாமி
16. குறிஞ்சி மலர் - நா- பார்த்தசாரதி.
17. குருதிப் புனல் - இந்திரா பார்த்தசாரதி
18. வாடிவாசல் - சி.சு. செல்லப்பா.
19. கதவு,கோபல்ல கிராமம் - கி. ராஜநாராயணன்
20. கலைக்கமுடியாத ஒப்பனைகள் - வண்ணதாசன்
21. கடல்புரத்தில் - வண்ண நிலவன்
22. சிறகுகள் முறியும் - அம்பை
23. என் பெயர் ஆதிசேஷன் - ஆதவன்
24. இன்று நிஜம் - சுப்ரமணிய ராஜூ
25. தேவன் வருகை -சுஜாதா
26. யவனராணி -சாண்டில்யன்
27. ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள், ஒரு மனுஷி - பிரபஞ்சன்
28. கல்லுக்குக் கீழும் பூக்கள் - மாலன்
29. நாளை மற்றொரு நாளே - ஜி. நாகராஜன்.
30. அப்பாவும் ரெண்டு ரெண்டு ரிக்க்ஷாக்கரர்களும்- ம.வே.சிவகுமார்
31. பச்சைக் கனவு - லா.ச.ரா
32. தலைமுறைகள் - நீல. பத்மநாபன்
33. ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி
34. பிறகு - பூமணி
35. புத்தம் வீடு - ஹப்சி பா ஜேசுதாசன்
36. நுணலும், புனலும் -ஆ. மாதவன் ,
37. மௌனி சிறுகதைகள் - மௌனி
38. நினைவுப் பாதை - நகுலன்
39. சம்மதங்கள் - ஜெயந்தன்
40. நீர்மை - ந. முத்துசாமி
41. சோற்றுப் பட்டாளம் - சு. சமுத்திரம்
42. புதிய கோணங்கி,வாசுவேஸ்வரம் - கிருத்திகா
43. தரையில் இறங்கும் விமானங்கள் - இந்துமதி
44. ஒரு மனிதனின் கதை - சிவசங்கரி
45. கடலோடி - நரசையா
46. குசிகர் குட்டிக் கதைகள் - மாதவையா
47. சின்னம்மா - எஸ். ஏ. பி.
48. படகு வீடு - ரா.கி. ரங்கராஜன்
49. வழிப் போக்கன் - சாவி
50. மூங்கில் குருத்து - திலிப் குமார்
51. புயலில் ஒரு தோணி - ப.சிங்காரம்
52. ஒரு ஜெருசலேம் - பா- ஜெயப் பிரகாசம்
53. ஒளியின் முன் - ஆர். சூடாமணி
54. மிஸ்டர் வேதாந்தம் - ஜஸ்டிசே ஜெகநாதன்

கவிதைகள்

1. அன்று வேறு கிழமை - ஞானகூத்தன்
2. பெரிய புராணம் - சேக்கிழார்
3. நாச்சியார் திருமொழி - ஆண்டாள்
4. அழகின் சிரிப்பு - பாரதிதாசன்
5. வழித் துணை - ந. பிச்சமுர்த்தி
6. தீர்த்த யாத்திரை - கலாப் பிரியா
7. வரும் போகும் - சி. மணி
8. சுட்டு விரல், பால் வீதி - அப்துல் ரஹ்மான்
9. கைப்பிடி அளவு கடல் - தாமு சிவராமு
10. ஆகாசம் நீல நிறம் - விக்ரமாதித்தியன்
11. நடுநிசி நாய்கள் - சுந்தர ராமசாமி

கட்டுரைகள்
01. பாரதியார் கட்டுரைகள் - பாரதியார்
02. வால்கவிளுருந்து கங்கை வரை - ராகுல சாங்கிருத்தியாயன்
03. பாலையும், வாழையும் - வெங்கட் சாமிநாதன்
04. சங்கத் தமிழ் - மு. கருணாநிதி
05. வளரும் தமிழ் - தமிழண்ணல்
06. மார்சியமும் தமிழ் இலக்கியமும் - ஞானி
07. இந்தக் குளத்தில் கல் எறிந்தவர்கள் - வைரமுத்து

வாழ்க்கை சரிதம்
01. என் சரிதம் -உ.வே.சாமிநாதையர்
02. கார்ல் மார்க்ஸ் - வே. சாமிநாத சர்மா
நாடகம்
01. சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் - சி. என். அண்ணாதுரை
மொழி பெயர்ப்புகள்

01.அழிந்த பிறகு - சிவரமகாந்த்
02.பாட்டியின் கனவுகள் - சிவரமகாந்த்
03.அந்நியன் - ஆல்பர்கொமோ
04.சிறுகதைகள் - ஒ ஹென்றி

Monday, February 8, 2010

Thursday, February 4, 2010

நம்பிக்கை விளக்கு ஏற்றுவோம்



Exnora is seriously working on the cause of alienating GLOBAL WARMING through its volunteers in a serious manner. Infact it has planned a 99999 compaign to show case the importance of GLOBAL WARMING. Apart from saving the use of the conventional energy sources, ExNoRa is also concerned about the use of Renewable Energy Products partucularly Solar Energy Products.

Exnora has a great feeling of compassion towards the lakhs and lakhs of common men who live in slums/Nari Kuravas / pavement vendors, farmers, fisherman who do not even have a lamp in their house and use Kerosene lamps for their daily needs. Each such kerosene lamps consume about 4 liters of kerosene every month.

Therefore, ExNoRa has embarked on this novel, innovative scheme to give 100000 solar lamps to replace 100000 kerosene lamps in the State of Tamilnadu.

This will clearly save about 45lakhs liters of kerosene every year for next 15years apart from giving light at these homes for reading and use.

HOW DOES THE SCHEME WORK :

Each volunteer can identify 2 such needy people in their area and donate these solar lamps to them. They can send their payment to our address along with the names and address of the user of the product.

ExNoRa team can also approach nearby philanthropists / social service organisation like Lion's club / Rotary club etc to join hands with us in their noble cause.

TIME FRAME FOR THIS SCHEME :

We plan to complete this concept scheme by 31 st March 2010.


WHAT IS THE BENEFIT :-


The needy people who don't have any light – we provide them with a light to study and use

We clearly dispense with 45 lakhs of liters of kerosene every year with this scheme for next 15 years

It is a clear programme to create large scale awareness of solar products in the public mind and thereby contributing to global warming and saving of CO2 emissions

First of its kind in the world, such a large level scheme is planned with public support to help the needy people
WHAT TO DO NEXT :
Donate ExNoRa Solkar Lamp

Receive ExNoRa Solkar Lamp

Payment details www.lightahome.org

Friday, January 8, 2010

படித்ததில் பிடித்தது - கலாம் காலங்கள் - PM நாயர்







நூலாசிரியர் PM நாயர் 2002 லிருந்து 2007 வரை ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் செயலாளராக பணியாற்றியவர். பாண்டிசேரியின் தலைமைச செயலாளர் ஆகவும் இருந்தவர்.

எந்த ஒரு பெரிய மனிதரும் தன்னுடைய செயலாளருக்கு நாயகனாக இருக்க முடியாது என்பதை தகர்த்து அவரைப் புகழுந்து "கலாம் காலங்கள்"எழுதியுள்ளார் நாயர்.

இனி கலாம் அவர்களின் சாதனைக் காலம். நாயர் வார்த்தைகளில் ....

1 "மிஸ்டர் நாயர்" என்று செயலாளரை அழைப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

2 ஒரு நாளைக்கு 70 முதல் 100 வரை கடிதங்களை விவாதிப்பதற்காக குறிக்கப்பட்டு இருக்கும்.
3 புத்தக விமர்சனங்கள் பக்க வாரியாக கூறக்கூடியவர்.

4 லட்சத் தீவுகளைத் தவிர இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் , கிராமத்திற்கும் தனது பதவிக் காலத்தில் பயணம் செய்தவர்.

5 உலகின் உயரமானப் போர்ப் பகுதியான சீயாசின் சென்றது, விசாகப்பட்டனத்தில் நீர்மூழ்கிக் கப்பலில் சாகசம் , சூப்பர்சொனிக் SQ30
போர் விமானம் 15 நிமிடங்கள் ஒட்டிய முதல் ஜனாதிபதி என்றப் பெருமைகளைப் பெற்ற ஒரே ஜனாதிபதியாக திகழ்கிறார் .

6 மே 2006 இல் தனது அண்ணன், கொள்ளுப் பேரன் மற்றும் 52 உறவினர்கள்
டெல்லி சுற்றுலா மற்றும் அஜ்மெர் ஷெரிப் சென்று வர அலுவலகத்திற்கான வாகனங்கள் ஒரு முறைக் கூடப் பயன்படுத்தப் படவில்லை, அறை ,தேனீர் பயன்பாடு செலவுகளை தனது சொந்தப் பணத்தில் செலுத்தினர். 3.52 லட்சம் செலுத்தியதை விளம்பரப் படுத்தக் கூட இல்லை.

7 இப்தார் விருந்து ஜனாதிபதி மாளிகையில் நடத்த ஆக்கும் செலவு 2.5 லட்சங்களை ஏழை மக்களுக்கு அரிசி, பருப்பு, போர்வை, குளிர்கால உடைகள் எனக் கொடுத்ததோடு தன பங்காக 1 லட்சத்தையும் கொடுத்தார்
குடியரசுத் தலைவரின் மாளிகை பரந்து விரிந்தது (329 ஏக்கர் ) என்பது அனைவரும் அறிந்ததே

அது

குடியரசுத் தலைவரின் மனது போல்

என்பதை PM நாயர் கலாம் காலங்களில் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.












Monday, January 4, 2010

ஹைகூ கவிதைகள் -தஞ்சை பத்மநாபன்




தாஜ் மகால்




சமாதியில்


விதைக்கப்பட்ட


காதல் விருட்சம்


ஹைகூ கவிதைகள் -தஞ்சை பத்மநாபன்


பரு

பதின்ம வயதினர்
தொலைத்த
பாதித் தூக்கம்

ஹைகூ கவிதைகள் - தஞ்சை பத்மநாபன்


நடை பாதை


நாலும்

நடக்குமிடம்

நடப்பதை மறித்து

ஹைகூ கவிதைகள் - தஞ்சை பத்மநாபன்


தேர்தல் மை

முகத்தில் கரி
பூசிக் கொள்ள
முன்னோட்டம்

Saturday, January 2, 2010

படித்ததில் பிடித்தது




" ஒரு நல்லப் புத்தகமும் சில கோப்பை காப்பியும் ஒரு விடுமுறை நாளை சிறப்பாகக் கழிக்க போதுமானது" என்றார் தஞ்சை பிரகாஷ். அப்படி ஒரு விடுமுறை நாளில் படித்த புத்தகங்களில் பிடித்த வரிகள்

துறவி நண்டு - எஸ். தேன்மொழி


கவிதைத் தொகுப்பு. காலச்சுவடு வெளியீடு.


"ஒருமை " தலைப்பில் ஒரு கவிதை


தீண்டத்தகாதவள் என்று
தெரியவரும்போது நீ
தீட்டுப் படவில்லை என்பதை
தெருவிப்பதற்காக அனுமதிக்கிறேன்
உன் ஆபாசத் தீண்டலை







தூரிகை ..... துப்பாக்கியாகிறது.........



கவிதை தொகுப்பு - பா. விஜய்



சுப-வீரபாண்டியன் அவர்களின் அணிந்துரையோடுத் தொடங்குகிறது.

நெடுங்கவிதை, ஹைகூ( மின்னல் என்று தலைப்புடன்), ஒரே மூச்சில் வாசிக்க சரளமாகவும், சாமானியனும் புரிந்துக் கொள்ளக் கூடிய நடையில் அமைந்துள்ளது. எ.கா
சமதர்மம்
நாங்கள் அவர்களை
தொட்டால் அது
அபசாரம்
அவர்கள்
எங்களைத் தொட்டால்
அது ஆசிர்வாதமாம்

சிகரட்

உன் மரணத்தை

எழுதும்

பல்பக் குச்சி

அனா ஆவன்னா - நா. முத்துக்குமார்

பல வெகுஜனப் பத்திரிகைகளில் வெளிவந்த கவிதைகளின் தொகுப்பு.

ஒவ்வொருக் கவிதையும் ஒரு காட்சியை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

கவிதைகளை படிக்கும்போதே காட்சிகள் மனதில் விரிகிறது. நல்லப் படைப்பு.

நட்பு காலம் - அறிவுமதி

நட்பை புத்தகம் முழுவதும் விவரிக்கிறது.

பரிசளிக்க ஏற்றப் புத்தகம் . அழகான ஓவியங்கள் புத்தகங்கள் முழுவதும்

பூத்துக் கிடக் கின்றது

மற்றும்
மழைப் பெண் - பழனி பாரதி
என் படுக்கையறையில் யாரோ ஒளிந்து இருக்கிறார்கள் - மனுஷ்யப் புத்திரன்
தொகுப்புகளும் என் விடுமுறையை நிறைத்தன.

தஞ்சை பிரகாஷின் வார்த்தைகள் உண்மைதான் என்பதை விடுமுறையும் படித்த புத்தகங்களும் சில கோப்பை தேனீர் களும் புரியவைத்தன.