Saturday, January 2, 2010

படித்ததில் பிடித்தது




" ஒரு நல்லப் புத்தகமும் சில கோப்பை காப்பியும் ஒரு விடுமுறை நாளை சிறப்பாகக் கழிக்க போதுமானது" என்றார் தஞ்சை பிரகாஷ். அப்படி ஒரு விடுமுறை நாளில் படித்த புத்தகங்களில் பிடித்த வரிகள்

துறவி நண்டு - எஸ். தேன்மொழி


கவிதைத் தொகுப்பு. காலச்சுவடு வெளியீடு.


"ஒருமை " தலைப்பில் ஒரு கவிதை


தீண்டத்தகாதவள் என்று
தெரியவரும்போது நீ
தீட்டுப் படவில்லை என்பதை
தெருவிப்பதற்காக அனுமதிக்கிறேன்
உன் ஆபாசத் தீண்டலை







தூரிகை ..... துப்பாக்கியாகிறது.........



கவிதை தொகுப்பு - பா. விஜய்



சுப-வீரபாண்டியன் அவர்களின் அணிந்துரையோடுத் தொடங்குகிறது.

நெடுங்கவிதை, ஹைகூ( மின்னல் என்று தலைப்புடன்), ஒரே மூச்சில் வாசிக்க சரளமாகவும், சாமானியனும் புரிந்துக் கொள்ளக் கூடிய நடையில் அமைந்துள்ளது. எ.கா
சமதர்மம்
நாங்கள் அவர்களை
தொட்டால் அது
அபசாரம்
அவர்கள்
எங்களைத் தொட்டால்
அது ஆசிர்வாதமாம்

சிகரட்

உன் மரணத்தை

எழுதும்

பல்பக் குச்சி

அனா ஆவன்னா - நா. முத்துக்குமார்

பல வெகுஜனப் பத்திரிகைகளில் வெளிவந்த கவிதைகளின் தொகுப்பு.

ஒவ்வொருக் கவிதையும் ஒரு காட்சியை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

கவிதைகளை படிக்கும்போதே காட்சிகள் மனதில் விரிகிறது. நல்லப் படைப்பு.

நட்பு காலம் - அறிவுமதி

நட்பை புத்தகம் முழுவதும் விவரிக்கிறது.

பரிசளிக்க ஏற்றப் புத்தகம் . அழகான ஓவியங்கள் புத்தகங்கள் முழுவதும்

பூத்துக் கிடக் கின்றது

மற்றும்
மழைப் பெண் - பழனி பாரதி
என் படுக்கையறையில் யாரோ ஒளிந்து இருக்கிறார்கள் - மனுஷ்யப் புத்திரன்
தொகுப்புகளும் என் விடுமுறையை நிறைத்தன.

தஞ்சை பிரகாஷின் வார்த்தைகள் உண்மைதான் என்பதை விடுமுறையும் படித்த புத்தகங்களும் சில கோப்பை தேனீர் களும் புரியவைத்தன.











No comments:

Post a Comment