Monday, June 22, 2009

அதிர்ஷ்டம்?

அவசர சிகிச்சை

பிரிவுக்கு அருகிலேயே

விபத்து

Sunday, June 21, 2009

Showing posts with label எழுத்தாளர்கள் ஓர் எளிய அறிமுகம்Show all posts

thursday, april 17, 2008

எழுத்தாளர்கள் ஓர் எளிய அறிமுகம்

சுஜாதா ரங்கராஜன்


சுஜாதா ரங்கராஜன்..1960களில் எழுத தொடங்கி இன்றும் தன் எழுத்தில் இளமை மாறாமல் தொடர்கிறார்.விறுவிறுப்பு ,நகைச்சுவை, கதையை கொண்டும் செல்லும் வேகம்,வாசிப்பவரை கட்டிபோடும் திறன்..இவையே சுஜாதாவின் சிறப்பு.கணேஷ்-வசந்த் பங்குபெறும் துப்பறியும் கதைகள்(எதையும் ஒரு முறை,வசந்த்..வசந்த்..,அனிதா இளம் மனைவி,நிஜத்தை தேடி,மெரினா,..இன்னும் பல) வெகு பிரபலம்..இவரது பிரியா,காயத்ரி,கரை எல்லாம் சென்பகபூ போன்ற நாவல்கள் திரைப்படம் ஆயின.என் இனிய இயந்திரா,நிர்வாண நகரம்,மீண்டும்ஜீனோ போன்றவை அறிவியல் சார்ந்த நாவல்கள்.சமீப காலங்களில் சுஜாதா கதைகளை காட்டிலும் கட்டுரைகளிலும்,திரைப்படங்களிலும் அதிக கவனம் செலுத்துகிறார்...சுஜாதாவை இந்தியாவின் சிட்னி ஷெல்டன் எனகூறினால் மிகை இல்லை.எனக்கு பிடித்த சுஜாதா நாவல்கள்..
வசந்த்,வசந்த்..
கரை எல்லாம் சென்பகபூ
எதையும் ஒரு முறை
நிஜத்தை தேடி
அனிதா இளம் மனைவி
என் இனிய இயந்திரா
ஆ!!!

எஸ்.ராமகிருஷ்ணன்


எஸ்.ராமகிருஷ்ணன்...ஊர் சுற்றி என்று தன்னை குறித்து தன் நாவல்களில் குறிபிடுவார்.பயணம் இவரது பொழுது போக்கு..தன் பயணத்தில் சந்தித்த மனிதர்களை பற்றியும்,அந்த இடங்களில் இருக்கும் பழக்க வழக்கங்கள் பற்றியும் இவர் எழுதிய கட்டுரைகள் யாவும் சிறப்பு.தனது இலைகளை வியக்கும் மரம் நூலில் அழிந்து வரும் நாட்டுப்புற கலைகளான வள்ளி திருமண நாடகம்,பாவை கூத்து,பொம்மலாட்டம்,நாதஸ்வர கலை இவற்றை பற்றி அந்த கலைஞர்களை சந்தித்து அவர்கள் நிலை குறித்தும் எழுதி உள்ளார். ஆனந்த விகடனில் வெளிவந்த இவரது கதாவிலாசம் என்கிற பயண கட்டுரை தொடர் இவருக்கு இலக்கிய உலகில் பெரும் பெயரை பெற்று தந்தது...நான் படித்த எஸ்.ராவின் படைப்புகள்..

உயிரெழுத்து
கதாவிலாசம் 
நடந்து செல்லும் நீரோற்று
பதேர் பாஞ்சாலி 
இலைகளை வியக்கும் மரம்
ஏழுதலை நகரம்

புதுமைபித்தன்புதுமைபித்தன்..தமிழ் இலக்கிய உலகின் பிதாமகன் என சொன்னால் மிகை இல்லை. அவரது சிறுகதைகள் யாவுமே எல்லைகள் அற்ற தன்மை கொண்டது..இலக்கணம் குறித்து அவர் அக்கறை கொண்டதில்லை..அவர்தம் ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு மாதிரி.அவரது கடவுளும் கந்தசாமிபிள்ளையும் கதையில் கடவுள் சென்னை பட்டணத்துக்கு ஒருநாள் ப்ரேவேசம் செய்தால் எப்படி இருக்கும் என்பதை கற்பனை மிகுந்து நகைச்சுவை கலந்து சொல்லி இருப்பார்..மற்றொரு கதையில் ஒரு எழுத்தாளனின் வறுமை பாட்டை விளக்கி இருப்பார்...மற்றொரு கதையில் பட்டணதுகுல் திடீரன பெரிய திமிங்கலம் வந்து செய்யும் சேட்டைகளை எழுதி இருப்பார்..பேய் பிசாசு மீது நம்பிக்கை கொண்டி இருப்பதை திகில் கலந்து காஞ்சனை கதையில் கூறி இருப்பார்..1950களில் இப்படி ஒரு கற்பனையுடன்,நகைச்சுவை உணர்வு கொண்டு தமிழில் எழுத்தாளன் இருந்தான் என்பது பெருமைக்குரியது..புதுமை பித்தனின் வாழ்வும் ஏழ்மையில் கழிந்தது என்பது மிகுந்த வேதனைக்குரியது.

யு.ஆர்.அனந்தமூர்த்தியு.ஆர்.அனந்தமூர்த்தி - கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த இவர் 1960களில் தம் இலக்கிய வாழ்வை தொடர்ந்தார். இவரது கதைகள் யாவும் சமுதாயத்தின் ஒடுக்கப்பட்ட மக்களை குறித்தும்,பிராமணர்களின் மேம்போக்கு மனபான்மைக்கு எதிரானதாகவும் கருத்தை கொண்டிருக்கும். இவரது நாவல்கள் சம்ஸ்காரா மற்றும் கடஷ்ரதா ஆகியவை திரை படம் ஆகின.இவரது முதல் நாவலான சம்ஸ்காரா முழுக்க பிராமண கோட்பாடுகளை வன்மையாக கண்டித்து எழுதபட்டதால் பெரும் எதிர்புக்குள்ளானது.. தமிழில் இவரது நாவல்கள் பல மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.தற்போது சாகித்ய அகாடமியின் தலைவரராக உள்ளார். 
இவரது நூல்கள் சில..
சம்ஸ்காரா (தமிழ்)
கடஷ்ரதா
பிறப்பு (தமிழ்)
அவஸ்தை (தமிழ்)

வண்ணதாசன்கல்யாணசுந்தரம் , கதை உலகில் வண்ணதாசன் எனவும் கவிதை உலகில் கல்யாண்ஜி எனவும் அறியப்படும் எழுத்தாளர்.வண்ணதாசன் உடைய கதைகள் யாவும் நம்மை வேறு உலகிற்கு எடுத்து செல்லும் பலம் கொண்டது .அவரது கதைகளில் நம்மை நாமே காணலாம்.எதோ ஒரு அறியாத மகிழ்ச்சி தோன்றி மறையும் அவரது எழுத்துக்களை படித்தால்.வண்ணதாசன் கதைகள் அமைதியானவை,அழகானவை,ஆழமானவை.. வண்ணதாசன் கதைகளை தெளிந்த நீரோடைக்கு ஒப்பிடலாம்....மழை நேரத்தில் கேட்க விரும்பும் மெல்லிசைக்கும் ஒப்பிடலாம்.........!!!!!!!

வண்ணதாசன் படைப்புகள்

வண்ணதாசன் சிறுகதைகள் - அனைத்து சிறுகதைகளின் தொகுப்பு,
கனிவு - சிறுகதை தொகுப்பு
குறுநாவல் - சின்னு முதல் சின்னுவரை 
நாவல் - கிருஷ்ணன் வைத்த வீடு.

ஜெயகாந்தன் தமிழ் இலக்கியத்தில் ஒரு புரட்சிகர எழுத்தாளர்.ஆணாதிக்க மேம்போக்கு அதிகம் மேலோங்கி இருந்த 1970களில் இவரது எழுத்தின் வீரியம் பெரும் எழுச்சியை தோற்றுவித்தது. தீவிரமும்,உறுதியும்,கண்டிப்பும் கொண்டவை இவரது எழுத்துக்கள். பெண்களை மையபடுத்தி இவர் எழுதிய நாவல்கள் சில நேரங்களில் சில மனிதர்கள்,ஒரு நடிகை நாடகம் பார்கிறாள்,கங்கை எங்கே போகிறாள் போன்றவை சராசரி எழுதுதாளர்களில் இருந்து இவரை வேறுபடுத்தி காட்டியது.சாகித்திய அகாடமி விருந்து,பாவலர் விருந்து ஆகியவை சமீபத்தில் இவருக்கு கிட்டியது.

இவரது படைப்புகள்:

சில நேரங்களில் சில மனிதர்கள்
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
பாரீசுக்கு போ 
தேவன் வந்தான் (சிறுகதை தொகுப்பு)
குரு பீடம் (சிறுகதை தொகுப்பு)
ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன 
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
என்னை போலே ஒருவன் 
கங்கை எங்கே போகிறாள் இன்னும் பல...

வண்ணநிலவன்வண்ணநிலவன் - தமிழ் இலக்கியத்தில் ஒரு தவிர்க்க முடியாத எழுத்தாளர்.நெல்லை வட்டார வழக்கில் எழுதும் இவர் வண்ணதாசனை போலவே மனித உறவுகளுக்குள் நிலவும் மகிழ்வையும் ,வேதனையையும் தம் எழுத்துக்களில் வெளிப்படுத்துகிறார். 

வண்ணநிலவன் படைப்புகள்,

நாவல்கள்:

ரெய்நீஸ் ஐயர் தெரு 
கடல்புரத்தில் 
கம்பாநதி
காலம் 
சிறுகதை தொகுப்பு:

தாமிரபரணி கதைகள் 
உள்ளும் புறமும்

சாரு நிவேதிதா சாரு நிவேதிதா - தமிழ் இலக்கியத்தில் புரட்சிகர எழுத்தாளர்கள் வரிசையில் ஜெயகாந்தனுக்கு பிறகு வீரியமிக்க எழுத்துக்கள் சாருவுடையது.சமுதாயத்தின் அவலங்களை தன் எழுத்தின் மூலம் தொடர்ந்து சுட்டிகாட்டி வருகிறார்.சாருவின் எழுத்துக்கள் தீவிரமும்,கண்டிப்பும்,பட்டவர்தனமும் கொண்டவை..தற்போது உள்ள வாழ்வியல் சூழ்நிலையில் இவர் போன்ற எழுத்தாளர்கள் மிகதேவையே..கடந்த 10 வருடங்களுக்கு மேலாக எழுதி வரும் சாருவின் எழுத்து நடையில் அழகும்,இளமையும் அதிகரித்து வருகிறதே தவிர அதில் தளர்வில்லை..

Monday, June 15, 2009

எம் .எஸ். உதயமூர்த்தி

சிறு குறிப்பு

மயிலாடுதுறை நகரில் பிறந்தார்.
முதுகலை அறிவியலில் வேதியியல் ப்டிப்பு அண்ணாமலை பல்கலை கழகத்தில் தேர்ச்சி.
முதுகலை அறிவியலில் (ORGANIC CHEMISTRY) வேதியியல் ப்டிப்பு
சென்னை பல்கலை கழகத்தில் தேர்ச்சி.
புல் பிரைட் அறிஞராக (FULL BRIGHT - SENATOR OF AMERICAN PARLIAMENT )அமெரிக்காவால் டாக்ட்ரடேட் படிப்பில் வெற்றி.

பல நிறுவனங்களில் விற்பனையாளர் முதல் மேலாளர் வரை பலவகை வேலை கற்றார்.

பார்க்லே எனும் புதிய ரசாயணம் தயாரிக்கும் நிறுவனம் தொடங்கினார்.

இன்றும் நல்ல நிலையில் மிகப்பெரிய லாபம் தரும் அந்த தொழிலை தன் மகனிடம் ஒப்படைத்து விட்டு சென்னை திரும்பி மக்கள் சக்தி இயக்கம் தொடங்கினார் .

சுய வளர்ச்சி , சுய பொருளாதார மேம்பாடு, சமூக மேம்பாடு இதன் குறிக்கோள்கள் .
Saturday, June 13, 2009


கவிப்பேரரசு வைரமுத்து பக்கம்


வைரமுத்து
உலகத் தமிழர்கள் உச்சரிக்கும் ஒரு பெயர் வைரமுத்து.
3000 ஆண்டு இலக்கண இலக்கிய வளம்கொண்ட செம்மொழித் தமிழின் ஈரங்களையும், சாரங்களையும் உள்வாங்கி இன்று உலகப்பார்வையோடு பரந்து விரிந்திருக்கும் படைப்பாளி.
இந்திய அரசின் உயர்ந்த விருதான பத்மஸ்ரீ விருதினைத் தமது இலக்கியத்திற்காகவும், சாகித்ய அகாடமி விருதினைத் தமது கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலுக்காகவும், இந்தியாவின் சிறந்த பாடலாசிரியர் என்ற தேசிய விருதினை 5 முறை தம் திரைப்பாடல்களுக்காகவும் பெற்று ஒரு மகாகவியின் அடையாளங்களோடு அறியப்படுபவர்.
வேர்கள்
இவரது மொழியின் வேர்களைப் போலவே வாழ்க்கையின் வேர்களும் ஆழமானவை. தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் பழைய மதுரை மாவட்டத்தில் இன்றைய தேனி மாவட்டத்தில் ஓர் எளிய விவசாயக் குடும்பத்தில் 1953 ஜுலை 13 இல் கண்விழிக்கிறார் கவிஞர் வைரமுத்து. தந்தையார்: ராமசாமித்தேவர், அன்னையார்: அங்கம்மாள். அறுபது வீடுகளே கொண்ட மெட்டூர் என்ற குக்கிராமம் அவர் பிறந்த ஊர். மண்ணோடு போராடும் மனிதர்களும், ஆடு மாடுகளும், பறவைகளும், ஊரைக் காவல் காத்த பாலைவனத் தாவரங்களும் வைரமுத்துவின் ஐந்து வயது ஆச்சர்யங்கள்.
1957 இல் வைகை அணை கட்டி முடிக்கப்படுகிறது. அணையின் நீர்தேங்கும் பரப்புக்குள்ளிருந்த 14 கிராமங்கள் அரசாங்கத்தால் காலி செய்யப்படுகின்றன. அப்படி மூழ்கிப்போன தனது தாய்க் கிராமத்தைவிட்டு, அடையாளம் தெரியாத சோகத்தோடு அழுதுகொண்டே தன் தாயின் சுட்டுவிரல் பற்றிக்கொண்டு சுதந்திர இந்தியாவில் அகதியைப்போல வெளியேறி வடுகபட்டி என்ற அடுத்த கிராமத்திற்குக் குடும்பத்தோடு குடி பெயர்ந்தபோது வைரமுத்துவுக்கு வயது 5.
மண்ணை இழந்த சோகத்தோடு வைரமுத்து வாழ்வின் இரண்டாம் பாகம் வடுகபட்டியில் தொடர்கிறது. கல்வியோடு விவசாயம், விவசாயத்தோடு கல்வி என்று வைரமுத்துவுக்கு அங்கே இரட்டை வாழ்க்கை வாய்க்கிறது.
தமிழை நோக்கி...
google_protectAndRun("render_ads.js::google_render_ad", google_handleError, google_render_ad);
1960களில் தமிழ்நாட்டை மையம் கொண்டிருந்த திராவிட இயக்கங்களின் பகுத்தறிவும், மொழி உணர்வும் கவிஞர் வைரமுத்துவை உற்சாகப்படுத்தின. தந்தை பெரியார்-பேரறிஞர் அண்ணா-முத்தமிழறிஞர் கலைஞர்-பாரதி-பாரதிதான்-கண்ணதாசன் என்ற ஆளுமைகள் அவரை ஈர்த்தன. வடுகப்பட்டியில் உயர்நிலைப்பள்ளிக் கல்வி பயிலும்போதே கவிதையாலும் சொற்பொழிவாலும் தனித்து அடையாளம் காணாப்பட்டார் வைரமுத்து. மொழியின் மீது கொண்ட காதலால் நூலகத்தில் கூடுகட்டும் பறவையாகிப் போனார். மொழியை வகுப்பறைகள் கற்றுத் தந்தன. வாழ்வோடு போராடும் மக்கள் அவருக்கு வாழ்க்கையைக் கற்று தந்தார்கள்.
வறண்ட வாழ்க்கையால் நேர்ந்த வெற்றிடத்தை இலக்கியக்காற்று வந்து நிரப்பியது. 11 வயதில் கவிதை எழுதத் தொடங்கிய வைரமுத்து 14 வயதில் வெண்பா என்னும் கடினமான யாப்பு வடிவத்தில் தேர்ச்சிகொண்டார். பள்ளி நிறைவுத் தேர்வில் தமிழில் முதல் மதிப்பெண் பெற்று வெள்ளிக் கோப்பை வென்றெடுத்தார்.
கல்லூரிக் கல்வி
கண்நிறையக் கனவுகளையும் நெஞ்சு நிறைய லட்சியங்களையும் சுமந்து கொண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1970 இல் சேர்ந்தார். அங்கே வைரமுத்துவின் கல்வி உலகமும் இலக்கிய உலகமும் விரிவடைந்தன. 1972-இல் பி.ஏ., இரண்டாம் ஆண்டு மாணவராக இருந்த போது இவரது முதல் கவிதைத் தொகுப்பான வைகறை மேகங்கள் வெளிவந்தது. இவர் மானவராக இருந்தபோது படைத்த வைகறை மேகங்கள் இவர் மாணவராக இருந்தபோதே ஒரு மகளிர் கல்லூரிக்குத் துணைப் பாடமாக அமைந்தது.
மரபு, நவீனம் இரண்டையும் குழைத்து வைரமுத்து தனக்கென்று தனியானதொரு கவிதை மொழியைத் தயாரித்துக் கொண்டார். உள்ளடக்கம்-உருவம்-நவீன வெளிப்பாட்டு முறை ஆகிய அனைத்திலும் தமிழ் இலக்கிய உலகத்தின் கவனத்தை ஈர்த்தார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றார். முதல் வகுப்பில் கல்லூரியின் முதல் மாணவனாகத் தேறினார்.
வைரமுத்துவின் புதுக்கவிதைத் தொகுப்பான 'திருத்தி எழுதிய தீர்ப்புகள்' 1979 இல் வெளிவந்தது.அது தமிழ் இலக்கியப்பரப்பில் கணிசமான அலைகளை ஏற்படுத்தியது.
திரையுலகில்...
1980 இல் பாரதிராஜாவின் நிழல்கள் படத்தின் மூலம் வைமுத்துவின் திரையுலகப் பிரவேசம் நிகழ்ந்தது. இவரது வருகைக்குப் பிறகு திரைப்பாட்டு, புதிய சிகரங்களைத் தொட்டது.மொழிநடையின் கட்டுமானங்களை உடைத்து, முன்னெப்போதுமிராத படிம வீச்சுக்களோடு திரைப்பாட்டுக்குக் கவிதையின் ஆபரணங்களை அணிவித்து பிற மொழிகளின் செவிகளையும் தமிழை நோக்கி திரும்பச் செய்தார் வைரமுத்து.
இதுவரை 6500 பாடல்கள் புனைந்திருக்கிறார்.
ஒவ்வொரு பத்தாவது நிமிடத்திலும் இவரது பாடல் ஒன்று உலக வானொலியில் ஒலிப்பரப்பாகின்றது; அல்லது உலகத்தமிழ்த் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பாகின்றது.
சிறந்த பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருதினை 4 முறை பெற்ற பாடலாசிரியர் இவர்தான்.
ஐந்து திரைப் படங்களுக்கு கதை வசனமும் தீட்டியிருக்கிறார். அவற்றில் எதார்த்தத்தின் வழியே அழகியலின் எல்லைகளை எட்டியிருக்கிறார். மனிதப் பாத்திரங்களின் ஆழ்மன ஆழங்களைத் தொட்டிருக்கிறார்.
தேசிய விருதுகள்
குடியரசுத் தலைவரிடமிருந்து சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை ஐந்து முறை பெற்ற ஒரே படலாசிரியர் இந்தியாவில் இவர் மட்டும்தான். இவர் படைத்த கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலுக்காக 2003 இல் சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கிறார்.இவரது இலக்கியப் பணிக்காக 2003 இல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
படைப்புலகம்
வைரமுத்துவின் படைப்புலகம் ஆழ்ந்து விரிந்தது. தமிழ் இலக்கியப் பயிற்சியும், உலக இலக்கிய ஈடுபாடும், வாழ்வியல் குறித்த கூரிய பார்வையும், நேரிய சிந்தனையும், இருத்தல் பற்றிய பிரக்ஞையும், அழகியல் ஊறிய எதார்த்த மொழியும் கவிஞர் வைரமுத்துவின் படைப்புலக பலங்கள்.
கவிதை, நாவல், திரைப்பாட்டு, கட்டுரை, பயண இலக்கியம், திரை வசனம், மொழி பெயர்ப்பு என்று பல்வேறு இலக்கிய வடிவங்களில் 35 படைப்புகளை வைரமுத்து படைத்திருக்கிறார். மொழியை நவீனப்படுத்தியதிலும், ஓர் இலக்கியத் தலைமுறையை உருவாக்கியதிலும், ஊடகங்களின் மொழிநடையைக் கணிசமாக மாற்றியதிலும் இவர்தம் படைப்புகளுக்குப் பெரும்பங்கு இருக்கிறது.
இவர் படைப்புகளை ஆராய்ச்சி செய்து பத்துப் பேராசிரியர்கள் டாக்டர் பட்டமும் முப்பதுக்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் எம்·பில் பட்டமும் பெற்றிருக்கிறார்கள். இந்தியாவின் பல பல்கலைக்கழகங்களிலும் கடல் கடந்தும் இவரது படைப்புகள் பாடங்களாகத் திகழ்கின்றன.
மொழிப்பெயர்ப்புகள்
இவர் கவிதைகள் ஆங்கிலம்,இந்தி,தெலுங்கு,மலையாளம்,ரஷ்யன்,நார்வேஜியன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
"A DROP IN SEARCH OF THE OCEAN" என்ற பெயரில் இவர்தம் தேர்ந்த கவிதைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு அன்றைய குடியரசுத் தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் அவர்களால் வெளியிடப்பட்டது. "பிந்து சிந்து கி ஓர்" என்ற தலைப்பில் இவர் கவிதைகள் இந்தியில் பெருந்தொகுப்பாக மொழி பெயர்க்கப்பட்டு இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் சாகித்திய அகாடமியின் தலைவரால் வெளியிடப்பட்டது.
இலக்கிய விருதுகள்
வைரமுத்துவின் படைப்பாளுமையைப் பாராட்டி, முதல்வர் கலைஞரின் முரசொலி அறக்கட்டளை ஒரு லட்ச ரூபாய் விருது வழங்கியது. இவரது தண்ணீர் தேசம் படைப்புக்காகத் தினத்தந்தி, ஆதித்தனார் விருதாக ரூபாய் 50,000 வழங்கியது.
ஒரு தனியார் அமைப்பு கனடா அரசாங்கத்தோடு இணைந்து கவிஞர் வைரமுத்துவின் தபால்தலையை டொரண்டோவில் வெளியிட்டு கெளரவித்தது.
வைரமுத்து தம் ஒவ்வொரு பிறந்த நாளிலும் மூத்த கவிஞர்களுக்கும், இளங்கவிஞர்களுக்கும் கவிஞர்கள் திருநாள் விருது வழங்கிப் பணமுடிப்பும் பட்டயமும் தந்து பாராட்டி வருகிறார். இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் விருது பெற்றிருக்கிறார்கள்.
டாக்டர் பட்டங்கள்
இவரது இலக்கியப் பணிகளுக்காக, தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகம் 2007 ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் வழங்கியது. மதுரை காமராசர் பல்கலைக்கழகம் 2008 ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
சான்றோர் கூற்று
80 மில்லியன் தமிழர்கள் அன்றாடம் உச்சரிக்கும் இந்தக் கவிஞரை அன்றைய குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் காப்பியக் கவிஞர் என்று போற்றினார். இந்தியாவின் அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இவரைக் கவி சாம்ராட் என்று பட்டம் சூட்டி அழைத்தார். தமிழ்நாட்டின் முதலமைச்சரும் தலைச்சிறந்த தமிழ்ப்படைப்பாளியுமான டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி இவருக்குக் கவிப்பேரரசு என்ற பட்டம் சூட்டி மகிழ்ந்தார்.
இலண்டனில் வைரமுத்துவுக்கு நிகழ்ந்த பாராட்டுவிழாவில் இங்கிலாந்து நாட்டின் கல்வியமைச்சர் ஸ்டீபன் டிம்ஸ், உணர்ச்சியும் அறிவும் சரியாக இணைந்த கலவைகள் வைரமுத்து கவிதைகள் என்று பாராட்டினார். இலண்டன் மாநகராட்சியின் ஆட்சி மன்றத்தலைவர் ராபின்வேல்ஸ், ராபர்ட் பர்ன்ஸ் என்ற ஸ்காட்லாந்துக் கவிஞரோடு கவிஞர் வைரமுத்துவை ஒப்பிட்டார்.
"இன்றைக்கு தமிழை ஆண்டுக் கொண்டிருக்கிற கவிஞராக உலகத்திலே உள்ள எல்லாப் பொருள்களைப் பற்றியும் பாடக்கூடிய வல்லமை வாய்ந்தவராக வைரமுத்து திகழ்கிறார்" என்று முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி இவரைப் பாராட்டியிருக்கிறார்.
இந்தியாவின் சிறந்த ஐம்பது இளைஞர்களுள் ஒருவர் என்று "இந்தியா டுடே" பத்திரிகை இவரைத்தேர்ந்தெடுத்துச் சிறப்பித்தது. 'அமெரிக்கன் லைப்ரரி ஆப்காங்கிரஸ்' இவரது கவிதைகளை இவரது குரலில் ஒலிப்பதிவு செய்து உலக இலக்கிய ஆவணங்களுள் ஒன்றாகப் பாதுகாத்து வருகிறது.
கண்டங்கள் கண்டவர்
அமெரிக்கா, கனடா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், ஆஸ்திரேலயா, ஜப்பான், சுவிட்சர்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பாங்காக், ஸ்ரீலங்கா, சவுதிஅரேபியா, ஐக்கிய அரபுநாடுகள், குவைத், ஓமன், மாலத்தீவுகள் ஆகிய நாடுகளில் இலக்கியப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
குடும்பம்
பேராசிரியரும் படைப்பாளியுமான டாக்டர் பொன்மணி வைரமுத்து இவர் மனைவி. ஆஸ்திரேலியாவின் க்வீன்ஸ்லேண்ட் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற மூத்த மகன் மதன்கார்க்கி, தகவல் தொழில்நுட்பப்பட்டம் பெற்ற இளையமகன் கபிலன் வைரமுத்து என மைந்தர் இருவர். குடும்பத்தோடு சென்னையில் வசிக்கிறார்.
விரியும் சிறகுகள்
உலக மானுடம் பருகும் தாய்ப்பாலாக இலக்கியம் இருக்கவேண்டும் என்பது அவரது படைப்புக் கொள்கை.
பிரபஞ்சம் குறித்த வியத்தலும், இருத்தல் குறித்த பெருமையும், உலக சமாதானமும் போரற்ற சமுதாயமும் வைரமுத்துவின் இலக்கிய உள்ளீடுகள்.
மனிதகுல மேம்பாடு என்ற இலட்சியத்தோடு இயங்கும் இலக்கியப் பயணத்தில் வைரமுத்துவின் வழிகளும், வெளிகளும் விரிந்து கொண்டே போகின்றன.
தேசிய விருதுகள்
1986
முதல்மரியாதை பாரதிராஜா
1993
ரோஜா மணிரத்னம்
1995
கருத்தம்மா பாரதிராஜா
1995
பவித்ரா கே.சுபாஷ்
2000
சங்கமம் சுரேஷ் கிருஷ்ணா
2003
கன்னத்தில் முத்தமிட்டால் மணிரத்னம்

படைப்புகள்
1
வைகறை மேகங்கள்
(1972)
2
திருத்தி எழுதிய தீர்ப்புகள்
(1979)
3
இன்னொரு தேசிய கீதம்
(1982)
4
கவிராஜன் கதை
(1982)
5
இதுவரை நான்
(1983)
6
என் பழைய பனை ஓலைகள்
(1983)
7
என் ஜன்னலின் வழியே
(1984)
8
மெளனத்தின் சப்தங்கள்
(1984)
9
வானம் தொட்டு விடும் தூரம்தான்
(1983)
10
கல்வெட்டுகள்
(1984)
11
கொடிமரத்தின் வேர்கள்
(1984)
12
கேள்விகளால் ஒரு வேள்வி
(1984)
13
ரத்ததானம்
(1985)
14
சிற்பியே உன்னை செதுக்குகிறேன்
(1985)
15
நேற்றுப் போட்ட கோலம்
(1985)
16
மீண்டும் என் தொட்டிலுக்கு
(1986)
17
எல்லா நதியிலும் என் ஓடம்
(1989)
18
வடுகப்பட்டி முதல் வால்கா வரை
(1989)
19
இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல
(1991)
20
காவி நிறத்தில் ஒரு காதல்
(1991)
21
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
(1991)
22
ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்
(1991)
23
சிகரங்களை நோக்கி
(1992)
24
இதனால் சகலமானவர்களுக்கும்
(1992)
25
வைரமுத்து திரைப்பாடல்கள் (தொகுதி 1)
(1993)
26
வைரமுத்து திரைப்பாடல்கள் (தொகுதி 2)
(1993)
27
வில்லோடு வா நிலவே
(1994)
28
தண்ணீர் தேசம்
(1996)
29
தமிழுக்கு நிறமுண்டு
(1997)
30
பெய்யெனப் பெய்யும் மழை
(1999)
31
வைரமுத்து கவிதைகள்
(2000)
32
கள்ளிக்காட்டு இதிகாசம்
(2001)
33
கொஞ்சம் தேநீர் நிறைய வானம்
(2005)
34
ஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும்
(2005)
35
கருவாச்சிக் காவியம்
(2006)
36
A DROP IN SEARCH OF THE OCEAN

37
Bindhu Sindhu Ki Oor

சந்தர்ப்பத்தால் வருவது பழக்கம்

சந்தர்ப்பங்கள் தவிர்ப்பது ஒழுக்கம்
அதிகாலை எழு

ஆகாயம் தொழு

இருதயம் துடிக்கவிடு

ஈறு அழுந்த பல் தேய்

உடல் வேர்வை கழி

ஊழைச் சதை ஒழி

எருது போல் உழை

ஏழை போல் உண்

ஐம்புலன் புதுக்கு

ஒழுத்திவிடு புகை மதுவை

ஓட்டம் போல் நட

ஔதடம் பசிdnesday, october 22, 2008

வைரமுத்துவின் "கள்ளிகாட்டு இதிகாசம்"

கவிஞராக மட்டுமே அறிந்து இருந்த எனக்கு வைரமுத்துவை சிறந்த எழுத்தாளனாய் காட்டிய கரிசல் இலக்கியம் இது!!பகட்டில்லாத,முக பூசில்லாத கரிசல் மனிதர்களும்,மண்ணுடன் ஆனா அவர்களின் உறவும்,பிரியமும் மிக நெருக்கமாய் உணர செய்யும் இந்த நாவல் விகடனில் தொடராக வந்தது.ஒரு கரிசல்பூமியில் வாழ்ந்து மடிந்த பேயதேவர் என்னும் மனிதனின் சோக வரலாறே "கள்ளிகாட்டு இதிகாசம்".

மண்ணோடும் பெற்ற மக்களோடும் போராடும் பேயத்தேவர் ஒரு சிக்கலில் இருந்து விடுபட்டு தலை நிமிர நினைக்கும் பொழுதில் இன்னொன்று வந்து புயலென சூழ தொடர்ந்து சுழட்டி அடிக்கபடுவது மனதை கனக்க செய்வதாய் உள்ளது.கோழி குழம்பு வைப்பதில் இருந்து சாராயம் காய்ச்சுவது வரை,சவர தொழில் நேர்த்திமுறைகள் முதல் வெட்டியானின் ஒரு பிணம் எரிக்கும் அனுபவங்கள் வரை அனுபவித்து சொல்லப்பட்டுள்ளன.இவ்வாறு சிறு சிறு விஷயங்களை விரிவாய் விவரித்துள்ள இடங்கள் வைரமுத்துவின் எழுத்தாளுமைக்கு எடுத்துக்காட்டு.கிராமத்து வாழ்க்கையோடு நமக்கு சிறிது பரிட்சயம் இருந்தால் இந்நாவல் மேலும் சுவாரசியமாக தோன்றும்.கமலை தோட்டத்தில் உழவு செய்யும் அழகை,தனி ஆளை தரிசு நிலத்தை விலை நிலமாக்க கிணறு வெட்டும் பேயதேவரின் உழைப்பும் எனக்கு வெவ்வேறு சம்பவங்களை நினைவு படுத்தியது.கோழி,ஆடு திருட்டு முதல் சாராயம் காய்ச்சுவது முதல் சகல கெட்ட காரியங்களில் ஈடுபட்டிருக்கும் பேயதேவரின் மகன் பாத்திர படைப்பு சண்டியர் தனம் செய்து திரியும் அசல் கிராமத்து இளைஞனின் குறியீடு.

பேயதேவரின் இளம் வயது காதல்,மனைவி மீதான பிரியம்,நாயக்கரோடு கொண்டிருந்த நட்பு,பேரனோடான தோழமை என யாவும் இயல்பு மாறாது உரையாடல்களால் சொல்லப்படுகின்றது. கிராமத்து மனிதர்களுக்குள்ளான நட்பும்,பிரியமும்,துன்பம் நேர்கையில் உதவும் மனமும்,மண்ணின் மீது கொண்ட பிரியமும்,கரிசல் பெண்கள் எப்படி எல்லா விதத்திலும் சராசரி பெண்களை விஞ்சி நிற்கின்றனர் என வைரமுத்து காலை முதல் மாலை வரை வயலில் உழைக்கும் அவர்களின் தின காரியங்களை பட்டியலிடும் இடமும் புழுதி காட்டின் மீதான பிரியத்தை அதிகரிக்க செய்பவை.

தொடர்ந்து வரும் துன்பங்களை சாபமாக கருதாது வாழ்க்கை மீதான நம்பிக்கைக்கும் வைக்கப்படும் சவால் என எண்ணி ஒவ்வொரு சிடுக்குகளையும் விடுவித்து கொண்டே பேயதேவர் முன்னேற இனி ஒரு போதும் வெளிவர முடியாத பெரும் துக்கம் வந்து தாக்குகின்றது.அணை கட்டும் பொருட்டு தேவரின் ஊரோடு சேர்த்து சில கிராமங்களை இடம் பெயர அரசாங்கம் வற்புறுத்துகிறது.அதை மீள இயலாது வீட்டு பொருட்களை கொஞ்ச கொஞ்சமாய் கொண்டு மேடு சேர்க்க,இறுதியில் தன் பூமியின் பிடிமண் எடுத்து திரும்பும் பொழுது நீரில் மூழ்கி இறக்கின்றார்.

நாவல் முழுவதும் தொடர்ந்து வரும் அதீத சோகம் ஒரு கட்டத்தில் அயர்ச்சியை தருகின்றது.இருப்பினும் சுவாரசியம் கூட்டும் வர்ணனைகளும்,மண்ணோடு வேர்விட்டு மழைக்கும்,புயலுக்கும் அஞ்சாது நிற்கும் ஆலம் விழுதென பேயத்தேவர் பாத்திர படைப்பின் வலிமையும் தொடர்ந்து படிக்கும் ஆர்வத்தை தருகின்றது.சேரும் புழுதியும் அப்பி மண்ணோடு மல்லு கட்டும் கரிசல் மக்களின் வாழ்க்கையை இந்நாவலில் அழகாய் பதிவு செய்துள்ளார் வைரமுத்து. courtesy leka

தஞ்சாவூர் தகவல்கள்

பரப்பளவு : 24 ச. கி.மீ

சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்

1 பெரிய கோயில் (BIG TEMPLE)

2 தஞ்சாவூர் அரண்மனை (THE THANJAVURPALACE)

3 சரஸ்வதி மகால் நூலகம் (SARASVATHIMAHAL LIBRARY)

Tuesday, June 2, 2009

EVERY INDIAN SHOULD STUDY THESE BOOKS- ABDUL KALAM RECOMMENDS


1. EMPIRE OF THE MIND - DENIS WAITLEY ( about how to face changes)
2. LIGHT FROM MANY LAMPS (about self confidence, peace, and health)
3. TO BEGIN WHERE I AM (about to know  the other side of life apart from money, post etc..)
4. THIRUKURAL 
5. RELIGIOUS BOOK ( LIKE QURAN, BAGWAT GITA, BIBLE,KIRAND SAHIB)