Monday, July 20, 2009

ஜாலியன் வாலா பாக்டாக்டர் சத்யபால், டாக்டர் சைபுதீன் கிச்லூ இருவரும் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள். இவர்களை மாவட்ட நீதிபதி அழைத்ததாகச் சொல்லப் பட்டது. பிறகு இருவரும் காணாமல் போயினர். தலைவர்களைத தேடி அலுத்தத் தொண்டர்கள் மாவட்ட நீதிபதியைப் பார்க்க நேரில் ஊர்வலமாகச் சென்றனர். அவர்களை இராணுவம் வழி மறித்து, கட்டுகடங்காமல் போனதால் துப்பாக்கிச் சூடு நடத்தியது. ஆத்திரமடைந்த் கூட்டத்தினர் கடைகள், அமிர்தசரஸ் நேஷனல் பேங்க், போஸ்ட் ஆபீஸ் அனைத்தையும் தீயிற்கு இரையாக்கினர்.
லாகோருக்கும் கிளர்ச்சிப் பரவியது.
இந்த அடக்குமுறையைக் கண்டிக்க அமிர்தசரசில் உள்ள ஜாலியன் வாலா பாக் எனும் இடத்தில் கூட்டம் ஏற்ப்பாடு ஆனது.
இதில் ஜெனரல் டயர் தலைமையிலான ஆங்கிலேயப் படை கண்மூடித்தனமாக சுட்டதில் நானூறுக்கும் மேற்ப்பட்ட இந்தியர்கள் இறந்தனர். இரண்டாயிரம் பேர் படு காயம் அடைந்தனர். அங்குள்ள பெரும் கிணற்றில் விழுந்து இறந்தவர்களே நூற்றுக்கணக்கானவர்கள்.
தண்ணீர் விட்டா வளர்த்தோம் இப்பயிரை
கண்ணீரால் காத்தோம்
என இன்றும் சுதந்திர வேள்வியின் அனுபவத்தைச் சுமந்துக் கொண்டே நினைவாய் நிற்கிறது ஜாலியன் வாலா பாக்.

Wednesday, July 15, 2009

பதேபூர் சிக்ரி ( வெற்றித் தலை நகரம்)

பதேபூர் சிக்ரி அக்பர் ராஜபுத் அரசன் ரானா சங்காவைத் வீழ்த்தியதன் அடையாளமாககட்டப்பட்டது . அக்பரின் தலைநகரமாக பதினாறு ஆண்டுகள் இருந்தது. அவருடைய மகன் ஜகாங்கீர் இங்குதான் பிறந்தார். திவானி ஆம் என்ற பொது மக்களை சந்திந்கும் இடமும், திவானி காஸ் என்ற ஆலோசனை கூடமும், புகழ்மிக்க பீர்பால் கதைகளில் வரும் அக்பரின் தலைமை அமைச்சர் மற்றும் நவ ரத்தினங்களில் ஒருவரான பீர்பால் அரண்மனை இங்கு உள்ளது. இந்தியாவிலேயே மிகப் பெரிய மற்றும் மிக உயரமான என்ற பெயரைக்கொண்ட புலண்டர்வாசா (பெரிய வாசல் ) பதேபூர் சிக்ரிஇல் அமைந்து உள்ளது. மகான் சலீம் சிஷ்டி (அக்பரின் ஞான குரு) இருக்கும் வரை சிக்ரியிலேயே இருந்த அக்பர் , அவரது மறைவுக்குப பின்னர் தலை நகரை ஆக்ராவிற்கு மாற்றினார். இன்றும் சிக்ரி கிராமம் அக்பரின் வெற்றியைத் தாங்கிக் கொண்டு பதேபூர் சிக்ரி என்ற வெற்றித் தலை நகராக விளங்கி வருகிறது.

Sunday, July 12, 2009

கை விளக்கு ஏந்திய காரிகை (பிளாரன்ஸ் நைடிங்கேல்)

பிளாரன்ஸ் நைடிங்கேல் அம்மையார் பெயரில் ஒரு தேசிய விருது செவிலியர்களுக்கு இந்திய அரசால் ஆண்டு தோறும் அவரது பிறந்த நாளன்று(12-மே) வழங்கப்பட்டு வருகிறது. விருது என்பது சேவைக்காக மட்டும் அல்லாமல் யார் பெயரில் வழங்கப்படுகிறது என்பதும் அதன் பண மதிப்பும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. வருடம்தோறும் ஒருவருக்கு மட்டும் என்றில்லாமல் ஒரே வருடத்தில் பலருக்கு தலா ரூபாய் 50,000 வழங்கப்படுகிறது. வருடம்தோறும் பல சர்ச்சைகள், எதிர்ப்புகள் மட்டுமல்லாமல் அந்தத தினத்தை கறுப்புத் தினமாக அறிவிக்கும் செவிலியர் அமைப்புகள் கூட இருக்கின்றன என்பதை எல்லாம் விடுத்து பிளாரன்ஸ் நைடிங்கேல் அம்மையார் அவர்களின் பின்னணி மற்றும் சேவை செவிலியர்கள் மற்றும் அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய ஒன்று.
பிளாரன்ஸ் நைடிங்கேல் அம்மையார் செல்வசெழிப்பான ஆங்கில குடும்பத்தில் 1820may12 அன்றுப் பிறந்தார். வறியவர்கள் மட்டுமே செய்துவந்த செவிலியர் சேவையை செல்வசெழிப்பான குடும்பத்தில் பிறந்த பிளாரன்ஸ் நைடிங்கேல் செய்ய குடும்பத்தினர் எதிர்ப்பு மற்றும் செவிலியர் படிப்பு ஒரு தொழிலாக அங்கிகாரம் பெறாமல் இருந்தது போன்றவை இருந்தது. செவிலியர் படிப்பை படிக்க எகிப்து மற்றும் ஜெர்மனியில் பயிற்சிப் பெற்று லண்டனில் ஒரு மருத்துவமனையில் சேர்ந்தார். நோயாளிகள் தாதியரை அழைக்க நோயாளிகளின் படுக்கைக்கு அருகில் ஒரு மணியை கட்ட ஏற்ப்பாடு செய்திருந்தார். அது பெரிய வரவேற்பைப் பெற்றது.
கிரேமேயன் போரில் ருஷியவிற்க்கு எதிராக பிரான்ஸ், துருக்கி மற்றும் பிரிட்டின் நடத்திய போர் கிரேமேயன் பெனிசுலா என்ற இடத்தில் நடந்ததால் கிரேமேயன் போர் என்று பெயர் Cதில் காயம் பெற்ற சிப்பாய்கள் சரியாக நடத்தப்படவில்லை என்பதால் அங்கு பிளாரன்ஸ் நைடிங்கேல் அம்மையார் பிரிட்டிஷ் அரசால் முப்பத்திஎட்டு தாதியர்களுடன் துருக்கி ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப் பட்டார். அங்கு அவர் செய்த பணி மற்றும் இரவில் ஒரு கை விளக்கு ஏந்தி வந்து சிறப்பாக பணி புரிந்ததால் கை விளக்கு ஏந்திய காரிகை என்று பெயர் பெற்றார்
அவர் செவிலியர் பயிற்சிப் பள்ளி ஒன்றை லண்டனில் அமைத்து வெளிவரும் மாணவர்கள் நைடிங்கேல் செவிலியர் என்று சிறப்பாக பெயர் பெற்றது .

Monday, July 6, 2009ஆஸ்கார்


கனவுலகத்தின் கனவு விருது ஆரம்பிக்கப்பட முயற்சிகள் எடுக்கப்பட்ட வருடம் 1927
அகாடமி ஆப் மோஷன் பிக்சர் என்ற பெயரில் 1929 மே மாதம் முதல் வழங்கப் பட்டு வருகிறது.


ஜார்ஜ் ஸ்டான்லி என்ற சிற்பி பிலிம் ரீல் சிலையில் இருக்கும் படி சிலையை வடிவமைத்தார்.


வடிவமைப்பு குழுவில் இருந்த நூலகர் மார்கரெட் அந்த சிலை தன்னுடைய மாமா


ஆஸ்கார் மாதிரி இருப்பதாக கூற அதுவே நிலைத்து ஆஸ்கார் விருது என்று ஆகிவிட்டது. எனவே ஆஸ்கார் என்பது ஒரு செல்லப் பெயர் மட்டுமே காரணப் பெயர் கிடையாது. 1927முதல் 1939 வரை ஆஸ்கார் விருது "அகாடமி ஆப் மோஷன் பிக்சர்"என்றே வழங்கப்பட்டு வந்தது.


எட்டரை பவுண்ட் எடையுடன் செம்பால் ஆன சிலை வழங்கப் பட்டு வந்தது .


இரண்டாம் உலகப்போர் சமயத்தில் மட்டும் பிளாஸ்டெர் ஆப் பாரிசில் வழங்கப்பட்டது


தற்போது தங்க முலாம் பூசப் பட்ட ஆஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது.