Sunday, July 12, 2009

கை விளக்கு ஏந்திய காரிகை (பிளாரன்ஸ் நைடிங்கேல்)

பிளாரன்ஸ் நைடிங்கேல் அம்மையார் பெயரில் ஒரு தேசிய விருது செவிலியர்களுக்கு இந்திய அரசால் ஆண்டு தோறும் அவரது பிறந்த நாளன்று(12-மே) வழங்கப்பட்டு வருகிறது. விருது என்பது சேவைக்காக மட்டும் அல்லாமல் யார் பெயரில் வழங்கப்படுகிறது என்பதும் அதன் பண மதிப்பும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. வருடம்தோறும் ஒருவருக்கு மட்டும் என்றில்லாமல் ஒரே வருடத்தில் பலருக்கு தலா ரூபாய் 50,000 வழங்கப்படுகிறது. வருடம்தோறும் பல சர்ச்சைகள், எதிர்ப்புகள் மட்டுமல்லாமல் அந்தத தினத்தை கறுப்புத் தினமாக அறிவிக்கும் செவிலியர் அமைப்புகள் கூட இருக்கின்றன என்பதை எல்லாம் விடுத்து பிளாரன்ஸ் நைடிங்கேல் அம்மையார் அவர்களின் பின்னணி மற்றும் சேவை செவிலியர்கள் மற்றும் அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய ஒன்று.
பிளாரன்ஸ் நைடிங்கேல் அம்மையார் செல்வசெழிப்பான ஆங்கில குடும்பத்தில் 1820may12 அன்றுப் பிறந்தார். வறியவர்கள் மட்டுமே செய்துவந்த செவிலியர் சேவையை செல்வசெழிப்பான குடும்பத்தில் பிறந்த பிளாரன்ஸ் நைடிங்கேல் செய்ய குடும்பத்தினர் எதிர்ப்பு மற்றும் செவிலியர் படிப்பு ஒரு தொழிலாக அங்கிகாரம் பெறாமல் இருந்தது போன்றவை இருந்தது. செவிலியர் படிப்பை படிக்க எகிப்து மற்றும் ஜெர்மனியில் பயிற்சிப் பெற்று லண்டனில் ஒரு மருத்துவமனையில் சேர்ந்தார். நோயாளிகள் தாதியரை அழைக்க நோயாளிகளின் படுக்கைக்கு அருகில் ஒரு மணியை கட்ட ஏற்ப்பாடு செய்திருந்தார். அது பெரிய வரவேற்பைப் பெற்றது.
கிரேமேயன் போரில் ருஷியவிற்க்கு எதிராக பிரான்ஸ், துருக்கி மற்றும் பிரிட்டின் நடத்திய போர் கிரேமேயன் பெனிசுலா என்ற இடத்தில் நடந்ததால் கிரேமேயன் போர் என்று பெயர் Cதில் காயம் பெற்ற சிப்பாய்கள் சரியாக நடத்தப்படவில்லை என்பதால் அங்கு பிளாரன்ஸ் நைடிங்கேல் அம்மையார் பிரிட்டிஷ் அரசால் முப்பத்திஎட்டு தாதியர்களுடன் துருக்கி ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப் பட்டார். அங்கு அவர் செய்த பணி மற்றும் இரவில் ஒரு கை விளக்கு ஏந்தி வந்து சிறப்பாக பணி புரிந்ததால் கை விளக்கு ஏந்திய காரிகை என்று பெயர் பெற்றார்
அவர் செவிலியர் பயிற்சிப் பள்ளி ஒன்றை லண்டனில் அமைத்து வெளிவரும் மாணவர்கள் நைடிங்கேல் செவிலியர் என்று சிறப்பாக பெயர் பெற்றது .

1 comment: