Sunday, June 21, 2009

Showing posts with label எழுத்தாளர்கள் ஓர் எளிய அறிமுகம்Show all posts

thursday, april 17, 2008

எழுத்தாளர்கள் ஓர் எளிய அறிமுகம்

சுஜாதா ரங்கராஜன்


சுஜாதா ரங்கராஜன்..1960களில் எழுத தொடங்கி இன்றும் தன் எழுத்தில் இளமை மாறாமல் தொடர்கிறார்.விறுவிறுப்பு ,நகைச்சுவை, கதையை கொண்டும் செல்லும் வேகம்,வாசிப்பவரை கட்டிபோடும் திறன்..இவையே சுஜாதாவின் சிறப்பு.கணேஷ்-வசந்த் பங்குபெறும் துப்பறியும் கதைகள்(எதையும் ஒரு முறை,வசந்த்..வசந்த்..,அனிதா இளம் மனைவி,நிஜத்தை தேடி,மெரினா,..இன்னும் பல) வெகு பிரபலம்..இவரது பிரியா,காயத்ரி,கரை எல்லாம் சென்பகபூ போன்ற நாவல்கள் திரைப்படம் ஆயின.என் இனிய இயந்திரா,நிர்வாண நகரம்,மீண்டும்ஜீனோ போன்றவை அறிவியல் சார்ந்த நாவல்கள்.சமீப காலங்களில் சுஜாதா கதைகளை காட்டிலும் கட்டுரைகளிலும்,திரைப்படங்களிலும் அதிக கவனம் செலுத்துகிறார்...சுஜாதாவை இந்தியாவின் சிட்னி ஷெல்டன் எனகூறினால் மிகை இல்லை.எனக்கு பிடித்த சுஜாதா நாவல்கள்..
வசந்த்,வசந்த்..
கரை எல்லாம் சென்பகபூ
எதையும் ஒரு முறை
நிஜத்தை தேடி
அனிதா இளம் மனைவி
என் இனிய இயந்திரா
ஆ!!!

எஸ்.ராமகிருஷ்ணன்


எஸ்.ராமகிருஷ்ணன்...ஊர் சுற்றி என்று தன்னை குறித்து தன் நாவல்களில் குறிபிடுவார்.பயணம் இவரது பொழுது போக்கு..தன் பயணத்தில் சந்தித்த மனிதர்களை பற்றியும்,அந்த இடங்களில் இருக்கும் பழக்க வழக்கங்கள் பற்றியும் இவர் எழுதிய கட்டுரைகள் யாவும் சிறப்பு.தனது இலைகளை வியக்கும் மரம் நூலில் அழிந்து வரும் நாட்டுப்புற கலைகளான வள்ளி திருமண நாடகம்,பாவை கூத்து,பொம்மலாட்டம்,நாதஸ்வர கலை இவற்றை பற்றி அந்த கலைஞர்களை சந்தித்து அவர்கள் நிலை குறித்தும் எழுதி உள்ளார். ஆனந்த விகடனில் வெளிவந்த இவரது கதாவிலாசம் என்கிற பயண கட்டுரை தொடர் இவருக்கு இலக்கிய உலகில் பெரும் பெயரை பெற்று தந்தது...நான் படித்த எஸ்.ராவின் படைப்புகள்..

உயிரெழுத்து
கதாவிலாசம் 
நடந்து செல்லும் நீரோற்று
பதேர் பாஞ்சாலி 
இலைகளை வியக்கும் மரம்
ஏழுதலை நகரம்

புதுமைபித்தன்புதுமைபித்தன்..தமிழ் இலக்கிய உலகின் பிதாமகன் என சொன்னால் மிகை இல்லை. அவரது சிறுகதைகள் யாவுமே எல்லைகள் அற்ற தன்மை கொண்டது..இலக்கணம் குறித்து அவர் அக்கறை கொண்டதில்லை..அவர்தம் ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு மாதிரி.அவரது கடவுளும் கந்தசாமிபிள்ளையும் கதையில் கடவுள் சென்னை பட்டணத்துக்கு ஒருநாள் ப்ரேவேசம் செய்தால் எப்படி இருக்கும் என்பதை கற்பனை மிகுந்து நகைச்சுவை கலந்து சொல்லி இருப்பார்..மற்றொரு கதையில் ஒரு எழுத்தாளனின் வறுமை பாட்டை விளக்கி இருப்பார்...மற்றொரு கதையில் பட்டணதுகுல் திடீரன பெரிய திமிங்கலம் வந்து செய்யும் சேட்டைகளை எழுதி இருப்பார்..பேய் பிசாசு மீது நம்பிக்கை கொண்டி இருப்பதை திகில் கலந்து காஞ்சனை கதையில் கூறி இருப்பார்..1950களில் இப்படி ஒரு கற்பனையுடன்,நகைச்சுவை உணர்வு கொண்டு தமிழில் எழுத்தாளன் இருந்தான் என்பது பெருமைக்குரியது..புதுமை பித்தனின் வாழ்வும் ஏழ்மையில் கழிந்தது என்பது மிகுந்த வேதனைக்குரியது.

யு.ஆர்.அனந்தமூர்த்தியு.ஆர்.அனந்தமூர்த்தி - கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த இவர் 1960களில் தம் இலக்கிய வாழ்வை தொடர்ந்தார். இவரது கதைகள் யாவும் சமுதாயத்தின் ஒடுக்கப்பட்ட மக்களை குறித்தும்,பிராமணர்களின் மேம்போக்கு மனபான்மைக்கு எதிரானதாகவும் கருத்தை கொண்டிருக்கும். இவரது நாவல்கள் சம்ஸ்காரா மற்றும் கடஷ்ரதா ஆகியவை திரை படம் ஆகின.இவரது முதல் நாவலான சம்ஸ்காரா முழுக்க பிராமண கோட்பாடுகளை வன்மையாக கண்டித்து எழுதபட்டதால் பெரும் எதிர்புக்குள்ளானது.. தமிழில் இவரது நாவல்கள் பல மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.தற்போது சாகித்ய அகாடமியின் தலைவரராக உள்ளார். 
இவரது நூல்கள் சில..
சம்ஸ்காரா (தமிழ்)
கடஷ்ரதா
பிறப்பு (தமிழ்)
அவஸ்தை (தமிழ்)

வண்ணதாசன்கல்யாணசுந்தரம் , கதை உலகில் வண்ணதாசன் எனவும் கவிதை உலகில் கல்யாண்ஜி எனவும் அறியப்படும் எழுத்தாளர்.வண்ணதாசன் உடைய கதைகள் யாவும் நம்மை வேறு உலகிற்கு எடுத்து செல்லும் பலம் கொண்டது .அவரது கதைகளில் நம்மை நாமே காணலாம்.எதோ ஒரு அறியாத மகிழ்ச்சி தோன்றி மறையும் அவரது எழுத்துக்களை படித்தால்.வண்ணதாசன் கதைகள் அமைதியானவை,அழகானவை,ஆழமானவை.. வண்ணதாசன் கதைகளை தெளிந்த நீரோடைக்கு ஒப்பிடலாம்....மழை நேரத்தில் கேட்க விரும்பும் மெல்லிசைக்கும் ஒப்பிடலாம்.........!!!!!!!

வண்ணதாசன் படைப்புகள்

வண்ணதாசன் சிறுகதைகள் - அனைத்து சிறுகதைகளின் தொகுப்பு,
கனிவு - சிறுகதை தொகுப்பு
குறுநாவல் - சின்னு முதல் சின்னுவரை 
நாவல் - கிருஷ்ணன் வைத்த வீடு.

ஜெயகாந்தன் தமிழ் இலக்கியத்தில் ஒரு புரட்சிகர எழுத்தாளர்.ஆணாதிக்க மேம்போக்கு அதிகம் மேலோங்கி இருந்த 1970களில் இவரது எழுத்தின் வீரியம் பெரும் எழுச்சியை தோற்றுவித்தது. தீவிரமும்,உறுதியும்,கண்டிப்பும் கொண்டவை இவரது எழுத்துக்கள். பெண்களை மையபடுத்தி இவர் எழுதிய நாவல்கள் சில நேரங்களில் சில மனிதர்கள்,ஒரு நடிகை நாடகம் பார்கிறாள்,கங்கை எங்கே போகிறாள் போன்றவை சராசரி எழுதுதாளர்களில் இருந்து இவரை வேறுபடுத்தி காட்டியது.சாகித்திய அகாடமி விருந்து,பாவலர் விருந்து ஆகியவை சமீபத்தில் இவருக்கு கிட்டியது.

இவரது படைப்புகள்:

சில நேரங்களில் சில மனிதர்கள்
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
பாரீசுக்கு போ 
தேவன் வந்தான் (சிறுகதை தொகுப்பு)
குரு பீடம் (சிறுகதை தொகுப்பு)
ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன 
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
என்னை போலே ஒருவன் 
கங்கை எங்கே போகிறாள் இன்னும் பல...

வண்ணநிலவன்வண்ணநிலவன் - தமிழ் இலக்கியத்தில் ஒரு தவிர்க்க முடியாத எழுத்தாளர்.நெல்லை வட்டார வழக்கில் எழுதும் இவர் வண்ணதாசனை போலவே மனித உறவுகளுக்குள் நிலவும் மகிழ்வையும் ,வேதனையையும் தம் எழுத்துக்களில் வெளிப்படுத்துகிறார். 

வண்ணநிலவன் படைப்புகள்,

நாவல்கள்:

ரெய்நீஸ் ஐயர் தெரு 
கடல்புரத்தில் 
கம்பாநதி
காலம் 
சிறுகதை தொகுப்பு:

தாமிரபரணி கதைகள் 
உள்ளும் புறமும்

சாரு நிவேதிதா சாரு நிவேதிதா - தமிழ் இலக்கியத்தில் புரட்சிகர எழுத்தாளர்கள் வரிசையில் ஜெயகாந்தனுக்கு பிறகு வீரியமிக்க எழுத்துக்கள் சாருவுடையது.சமுதாயத்தின் அவலங்களை தன் எழுத்தின் மூலம் தொடர்ந்து சுட்டிகாட்டி வருகிறார்.சாருவின் எழுத்துக்கள் தீவிரமும்,கண்டிப்பும்,பட்டவர்தனமும் கொண்டவை..தற்போது உள்ள வாழ்வியல் சூழ்நிலையில் இவர் போன்ற எழுத்தாளர்கள் மிகதேவையே..கடந்த 10 வருடங்களுக்கு மேலாக எழுதி வரும் சாருவின் எழுத்து நடையில் அழகும்,இளமையும் அதிகரித்து வருகிறதே தவிர அதில் தளர்வில்லை..

No comments:

Post a Comment